Freelancer / 2024 நவம்பர் 29 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது..
இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு V8 மற்றும் Montero போன்ற சொகுசு வாகனங்களை வழங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான உண்மைகளை மீளாய்வு செய்த பின்னரே, இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.க்களுக்கு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி பயிற்சி வழங்குதல், மக்கள் பிரதிநிதிகளுக்கான வீடுகள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அமைச்சர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் பரிந்துரையை கருத்தில் கொண்டு அமைச்சர்களின் சிறப்புரிமைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகிறது.
எம்.பி.க்களின் சிறப்புரிமைகள் தொடர்பில், நேற்று (28), பாராளுமன்ற அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, ”இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கவில்லை” என தெரிவித்தார்.
“அதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான வீடுகள் மற்றும் ஏனைய வசதிகளுக்கான ஏற்பாடுகள் தொடரும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் நடைபெற்ற செயலமர்வில் அவர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவிருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.AN
34 minute ago
53 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
53 minute ago
6 hours ago