2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சரவை அமைச்சர்கள் 46ஆக அதிகரிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக மூவர், நேற்று புதன்கிழமை நியமிக்கப்பட்டதை அடுத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சராக மலிக் சமரவிக்ரமவும் நீர்ப்பாச நீர்வள முகாமைத்துவ அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்ஸாவும்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக பைசர் முஸ்தபாவும் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்களுக்கான நியமனம் கடந்த 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அன்றையதினம் 42 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர, ஏற்கெனவே அமைச்சராக பதவியேற்றுக்கொண்டிருந்தார்.

இதன் அடிப்படையில் அமைச்சரவையின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 வரையிலும், இராஜங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை 45 வரையிலும் அதிகரித்து கொள்வதற்கு கடந்த 3ஆம் திகதியன்று நாடாளுமன்றம் அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .