Editorial / 2019 ஜூலை 13 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதுள்ள அரசாங்கத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவி இன்றி செயறப்ட முடியாது என்றும் இதை, ஐ.தே.க - த.தே.கூ அரசாங்கம் என்றே கூறவேண்டும் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியால், அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
கல்முனை பிரதேசச் செயலகத்தை தரமுயர்த்தித் தருவதாக, அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, த.தே.கூ வாக்களித்தது என்றும் கூறினார்.
த.தே.கூவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், அபிவிருத்தித் தேவைகளுக்கான நிதியாக, 50 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதாக, அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago