Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 28 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க. விஜயரெத்தினம்)
புதிய அரசு கையாளும் மாற்றமானது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மேலும் பலமடையும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறதெனவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
தனிச் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டுமென கூறுவது, இந்நாட்டில் இனங்களுக்கிடையில் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்துமெனவும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள், தமிழ் மக்களை முழுமையாகப் புறக்கணிக்கப்படும் விதத்தில் உள்ளதாகவும், கடந்த காலங்களில் நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும், தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நோக்கில் மிகவும் பொறுமையாகச் செயற்பட்டு பேச்சுகள் மூலமாக சுமுகமாக நிலைமைகளைக் கையாண்டு வந்தோம் என்றார்.
ஆனால், புதிய அரசாங்கம் தமிழ் மக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களை பொறுமை இழக்க வைக்கும் விதத்தில் அமைகின்றது எனவும், “இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை” என்று தந்தை செல்வா ஒருமுறை கூறினார். அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago