2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அரசாங்கம் வழங்கும் பல்வேறு சலுகைகள்

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச அலுவலர்களுக்கான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும் இருபத்தி மூன்று இலட்சம் சமுர்த்தி குடும்பங்களுக்கு ஆரம்பக் கொடுப்பனவாக 5000 ரூபாவையும் அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாது காத்திருப்புப் பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கும் ஏற்புடைய கொடுப்பனவை வழங்கவும் ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன், ஓய்வூதிய, முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியின் கீழ் ஓய்வுபெற்றோர் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 2020.04.03 ஆந் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (28) முற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கும் செயலணியின் பங்களிப்பு வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .