2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அரசியல்வாதிகள் மோசடிக்காரர்கள்

Kamal   / 2019 மார்ச் 26 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் வளங்களை அரசியல்வாதிகளே சூறையாடுகின்றனர் என குற்றஞ்சாட்டிய ஜே.வி.பி தலைவர் அனுர குமார​ திசாஸாநாயக்க, அரசியல்வாதிகள் மோசடிக்காரர்கள் எனவும் சாடியுள்ளார்.

பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு  மேலும் கருத்துரைத்த அவர், சட்டவிரோத மண் அகழ்வு, வனப்பகுதிகளில் ஹோட்டல்களை அமைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை அரசியல்வாதிகளே முன்னெடுத்து வருகின்றனர் எனவும் சாடியுள்ளார்.

அரசியல்வாதிகள் மோசடிக்கார்கள் ஆகியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் சாதாரண ஒழுக்கத்தைகூட அவர்கள் கடைப்பிடிப்பதில்லை எனவும் சாடியுள்ளார்.

அதனால், அடுத்த தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் அமைக்கப்படவுள்ள மக்கள் கூட்டணியை கொண்டே ​போட்டியிடவுள்ளதாகவும் அந்த கூட்டணி நாட்டை பலப்படுத்துவதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .