George / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முகப்புத்தகத்தில் குரல் பதிவை பதிவிட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமனறம், அவரை விடுவித்துள்ளது.
26 வயதுடைய தினுஷ் ஷாமர என்ற நபரே இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை, ஜனவரி 13ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .