2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பெங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவுடன் சேர்ந்து மேற்கொண்ட சோதனைகளில் இந்த பாம்புகளைக் கண்டுபிடித்தனர்.

இந்த பாம்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவைகள் என தெரியவந்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X