Editorial / 2025 நவம்பர் 21 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முகமட் பைசல் என்னை கொல்லுவதாக அச்சுறுத்தியுள்ளார் என்றும், இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபையில் முறையிட்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நிலையியல் கட்டளை கீழ் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது தொடர்பில் பாராளுமன்ற உணவக பகுதியில் வைத்து பைசல் எம்.பி தனக்கு அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வரவு- செலவுத்திட்ட குழுநிலை விவாதம் ஆரம்பிக்கப்பட முன்னர் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதுடன், அதற்கு அமைச்சர் பதிலளித்திருந்தார்.
அதன் பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த சம்பவத்தின் பின்னர் உடனடியாக சபைக்குள் வந்த அர்ச்சுனா எம்.பி ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து அது தொடர்பில் சபாநாயகரிடம் முறையிட்டார்.
இதன்போது அர்ச்சுனா எம்.பி கூறுகையில்,
நான் புத்தளம் மாவட்டம் தொடர்பான கேள்வியை எழுப்பிவிட்டு சிற்றுண்டிச்சாலைக்கு போகும் போது, அங்கு வாசலில் உள்ள கேமராவுக்கு முன்னால் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் என்னை கொலை செய்வதாக தெரிவித்தார். தயவு செய்து அந்த வீடியோ பதிவை எடுத்து விசாரணையை முன்னெடுங்கள். எனக்கு சாவதற்கு பயமில்லை. ஆனால் ஒரு கேள்வியை கேட்டதற்காக இவ்வாறு கூறுகிறார் என்றார்.
இவ்வேளையில் பதிலளித்த சபாநாயகர் இது தொடர்பான விடயத்தை சிறப்புரிமையை பிரச்சினையாக முன்வையுங்கள் என்றார்.
39 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
23 Nov 2025
23 Nov 2025