2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அல்வா, பூரி தின்றதால் 20 பசுக்கள் பலி

Editorial   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரியானாவில், தெருவில் சுற்றித்திரிந்த 20 பசுக்கள் திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையில் அல்வா, பூரி போன்ற ஜீரணிக்க முடியாத உணவை தின்று பசுக்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஹரியானாவின் ஹிசாரில், 'கோ சேவா ஹெல்ப் லைன் சமிதி' என்ற தன்னார்வ அமைப்பு செயல்படுகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை மீட்டு பராமரிக்கும் பணியில், இந்த அமைப்பு ஈடுபடுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் இங்குள்ள தெருக்களில் சுற்றித்திரிந்த, 20க்கும் மேற்பட்ட பசுக்கள் பலியாகியுள்ளதாக, இந்த அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமான சீதா ராம் சிங்கால் தெரிவித்தார்.

ஹிசாரில் தினமும் சராசரியாக இரண்டு தெரு பசுக்கள் இறக்கின்றன. இது இயற்கையாகவோ, நோய் பாதிப்பு காரணமாகவோ, விபத்தினாலோ பலியாகின்றன. நகரில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20 பசுக்கள் இறந்துள்ளன. இவை பெரும்பாலும் மக்கள் தரும் அல்வா, பூரி, வறுத்த தின்பண்டங்கள் போன்ற உணவுகளை தின்று, அதனால் அமிலத்தன்மை அதிகரித்து இறக்கின்றன இவ்வாறு அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .