Editorial / 2019 ஜூலை 01 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெற்றிடமாகியிருந்த அலுக்கோசு பதவிக்காக, இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனரென, சிறைச்சாலைகள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தெரிவு செய்யப்பட்ட இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தேவையான நேரத்தில் தமது கடமைகளை நிறைவேற்ற தயாராகவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுக்கோசு பதவிக்கான விண்ணப்பதாரிகள் 26 பேரின் பெயர்ப்பட்டியல், ஆரம்பப் பயிற்சிகளின் போது, அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பெயர்ப்பட்டியலிலுள்ள இருவர் அலுக்கோசு பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தெரிவு செய்யப்பட்டுள்ள 2 அலுக்கோசுகளின் அடையாளங்களை ஊடகங்களுக்கு வெளியிடாமல் இருக்க சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago