2026 மே 07, வியாழக்கிழமை

அலுவலக ரயில்களை அதிகரிக்க தீர்மானம்

J.A. George   / 2021 மே 03 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலுவலக ரயில்கள் சிலவற்றை இன்று(03) முதல் அதிகரிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

தூர இடங்களுக்குப் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தூர ரயில் சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளன. 

இருந்த போதிலும், பயணிகளின் கோரிக்கைக்கு அமைய வடக்கு ரயில் சேவை சில இடம்பெறுவதாகவும் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டிலுள்ள சகல மார்க்கங்களிலும் தனியார் பஸ் போக்குவரத்தை இன்று முதல் 25 சதவீதமாக குறைப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள் மூடப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் காரியாலயங்களும் பணிக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. 

இதனால் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .