2025 ஜூலை 05, சனிக்கிழமை

அலைபேசியைப் பயன்படுத்தி பரீட்சை எழுதியவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சையில் ஆங்கில பரீட்சையின் போது அலைபேசியை பயன்படுத்தி விடையெழுத்திய, தனிப்பட்ட பரீட்சார்த்தியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தான் கல்விக்கற்ற பிரத்தியேக வகுப்பாசிரியருக்கு வினாக்களை அனுப்பி, அந்த வினாக்களுக்கான விடையை குறுஞ்செய்தியின் ஊடாக பெற்று விடையளித்துகொண்டிருந்த போதே அவர் கைதுசெய்யப்பட்டார்.

பலாங்கொடை பொலிஸாரே, மேற்படி சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர். அவர் பலாங்கொடை தெபலமுள்ள பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆசிரியை பலாங்கொடை ராசகல பிரதேசத்தைச் ​சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .