2026 மார்ச் 07, சனிக்கிழமை

அவசரகால சட்டம் நீடிப்பு

Editorial   / 2026 மார்ச் 06 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிமூலம் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலநிலையை நீடிப்பதற்கு 100 மேலதிக வாக்குகளினால் சபை அங்கீகாரமளித்தது பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிமூலம் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலநிலையை நீடிப்பதற்கான விவாதம் இடம்பெற்றது .விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார். இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் அவசரகாலநிலையை நீடிப்பதற்கு ஆதரவாக108 வாக்குகளும் எதிராக 08வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே -100 மேலதிக வாக்குகளினால் அங்கீகாரமளிக்கப்பட்ட்து இதில் அவசரகாலநிலையை நீடிப்பதற்கு ஆதரவாக அரசாதரப்பினர் வாக்களித்த நிலையில் எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்கட்சி . ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் ஆகிய காட்சிகள் எதிர்த்து வாக்களித்தன, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,புதிய ஜனநாயக முன்னணி . ஐக்கிய தேசியக்கட்சி, தொழில் கட்சி, அர்ச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சைக்குழு 17ஆகிய கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .