2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அவுஸ்திரேலிய பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்டோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் இணைந்து கொண்டனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .