Freelancer / 2026 மே 05 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 82 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அசாம் சட்டப்பேரவைக்கு கடந்த 9 ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96 வீத வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து, வாக்குப் பெட்டியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காலை முதலே பா.ஜ.க முன்னிலைப் பெற்று வந்தது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் ஒரு லட்சத்து 12,186 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஆட்சி அமைக்க 64 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க 82 இடங்களைக் கைப்பற்றியது.
பா.ஜ.கவின் கூட்டணிகளான அசோன் கன பரிஷத் கட்சி 10 இடங்களிலும், போடோலாந்து மக்கள் முன்னணி 10 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஜோர்ஹட் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முதல்வர் முகமான கெளரவ் கோகாய் பா.ஜ.கவின் ஹிதேந்திரா நாத் கோஸ்வாமியிடம் 23,182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பா.ஜ.கவுக்கு முன்பு 50 ஆண்டுகள் தொடர்ந்து அஸ்ஸாமை ஆட்சி செய்துவந்த காங்கிரஸ், 3 ஆவது முறையாக பா.ஜ.கவிடம் தோல்வி அடைந்துள்ளது. (a)

21 minute ago
47 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
47 minute ago
55 minute ago