2026 மே 05, செவ்வாய்க்கிழமை

பலாப்பழம் மோதல்: தந்தையின் தாக்குதலில் மகள் உயிரிழப்பு

Editorial   / 2026 மே 05 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாப்பழம் பறித்தது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, மகளை இரும்புத் தடியால் தாக்கிப் படுகொலை செய்த தந்தை ஒருவரைக் களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த திலினி மதுஷானி   எனும் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.

மகளும் தந்தையும் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் அருகருகே உள்ள இரு வீடுகளில் வசித்து வந்துள்ளனர். எனினும், இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக, மகள் தனது கணவன் மற்றும் சிறு மகளுடன் வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றுக்குச் சென்று வசித்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தந்தை, மகள் முன்னர் வசித்த களுத்துறை வடக்கு காணியிலுள்ள பலா மரத்தில் இருந்து பழம் ஒன்றைப் பறித்துள்ளார். இது குறித்து அயலவர் ஒருவர் மகளுக்குத் தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து, மகள் அந்த இடத்திற்கு வந்து தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரான தந்தை வீட்டிலிருந்த இரும்புத் தடியால் மகளின் தலையில் தாக்கியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலை நடத்திய பின்னர், சந்தேகநபர் தான் பயன்படுத்திய இரும்புத் தடியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .