2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லுக்கு நடந்தது என்ன?

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல் 6 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.

இந்த மாணிக்கத்தின் பெறுமதி 2,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் தெரிவித்தார்.

530 கிலோ எடையுள்ள இந்த மாணிக்கக்கல் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது பெற வேண்டிய 25% வைப்புத் தொகையின்றி எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இரத்தினத்தை ஆய்வுக்கு எடுத்துச் செல்ல தேவையான ஆயிரம் ரூபா மட்டுமே அதிகாரியிடம் செலுத்தப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .