Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 03 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் இணைப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், சுகாதார காரணங்களுக்காக வழங்கப்பட்ட பாடசாலைகளின் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஆசிரியர் இடமாற்றங்களைப் பெற முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இணைக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக இணைப்பு கடந்த 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படவிருந்தது.
இந்தநிலையில் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களது இணக்கப்பாடு இருந்தால் மாத்திரமே, ஆசிரியர்கள் குறித்த பாடசாலைகளில் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை சேவையில் ஈடுபட முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .