2026 மே 12, செவ்வாய்க்கிழமை

ஆசிரியை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Freelancer   / 2025 மார்ச் 08 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, பளை - வேம்படிக்கேணியில் கிணற்றிலிருந்து ஆசிரியை  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தனிநபருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து மேற்படி ஆசிரியையின் சடலம் நேற்று (07) மீட்கப்பட்டுள்ளது.

துர்நாற்றம் வீசுவதை அறிந்து அயலவர்கள் குறித்த கிணற்றை நேற்று காலை அவதானித்தனர். அந்தக் கிணற்றை அவர்கள் பரிசோதித்தபோது, கிணற்றில் பெண் ஒருவர் சடலமாகக் காணப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியையான 54 வயதுடைய தவராசசிங்கம் சரஸ்வதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .