2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆசியா மற்றும் மத்திய கிழக்குக்கு 11 நேரடி விமான சேவைகள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியா மற்றும் மத்திய கிழக்கு வலயங்களை மையப்படுத்தி, ​மேலும் 11 நேரடி விமான சேவைகள், இலங்கையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.  

கொழும்பில் இருந்து, குறித்த 11 நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

பங்களாதேஷின் டாக்கா, ஓமானின் மஸ்கட், பாகிஸ்தானின் லாஹூர், பஹ்ரைன், மாலைதீவுகள், சீசெல்ஸ், இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் இந்தியாவின் கொல்கத்தா, மதுரை, வாரணாசி, புத்தகயா ஆகிய விமான நிலையங்களுக்கே, இந்த நேரடி விமானப் போக்குவரத்துகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  

கடந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த 17 இலட்சத்து 98,380 சுற்றுலாப் பயணிகளில் 9 இலட்சத்து 23,338 பேர், ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .