2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ராஜிதவின் சொத்துக்கள் முடக்கம்?

Editorial   / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  கவனம் செலுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட உள்ளதாகத் தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இருந்த பல இடங்களில் அவரைக் கைது செய்ய சமீபத்திய நாட்களில் சோதனை நடத்தப்பட்டாலும், அவரைக் கைது செய்ய முடியவில்லை.

ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் ஒரு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யத் தயாரானபோது அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .