Mayu / 2026 மே 20 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 21) இந்த விசேட பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவரான அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இக்குழு இதற்கு முன்னரும் பல தடவைகள் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த விசேட குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட ரீதியான தடைகள் குறித்து விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அக்குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
1 hours ago