2026 மே 20, புதன்கிழமை

ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

Janu   / 2026 மே 20 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் குண்டுகள் புதன்கிழமை (20) அன்று துருப்பிடித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக இவை மீட்கப்பட்டுள்ளதுடன், இந்த குண்டுகள் கடந்த யுத்த காலத்தில் பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இப் பகுதி தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக காணப்பட்டதுடன், அங்கிருந்து இராணுவ முகாம்களை நோக்கி மோட்டார் செல் குண்டுகள் ஏவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்கப்பட்டுள்ள குண்டுகள் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், மீட்கப்பட்ட குண்டுகளை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு (STF) அறிவிக்கப்பட்டுள்ளது.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X