2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ID சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Freelancer   / 2026 மார்ச் 24 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது.

இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவில் சரிசெய்து, பொதுச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .