Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
றம்ஸி குத்தூஸ்
இலங்கை சுதந்திரமடைந்தபோது, சுதந்திர வீரர்களாக முஸ்லிம்களின் பங்கையும் நாம் நினைவூட்டவேண்டியது எமது பொறுப்பாகுமெனத் தெரிவித்த வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், இலங்கையில் முஸ்லிம்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் வரலாற்றைக் கொண்டுள்ளனர் என்றார்.
இலங்கையின் 72ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு, கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலும் முஸ்லிம் கலாசாரத் திணைக்களமும் இணைந்து, கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று(04) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், நாட்டின் ஆட்சியாளர்களோடு முஸ்லிம்களும் இணைந்து செயற்பட வேண்டியது எமது பொறுப்பாகுமெனவும் நாட்டை முன்னேற்ற ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகுமெனவும் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலும் முஸ்லிம் கலாசாரத் திணைக்களமும் இணைந்து நடத்திய 72வது சுதந்திர தின நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம் பௌஸி,பைஸர் முஸ்தபா, றவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த லியாக்கத் அலி, கொழும்பு பிரதிமேயர்,கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் தலைவா்கள், உலமாக்கள் வெளிநாட்டு துாதுவா்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளா் அஷ்சேக் அஷ்ரப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, அஹமத் முனவ்வர் நெறிப்படுத்தினார். பிரதமரும் புத்தசாசன அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிச் செய்தியை, நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி சபையில் வாசித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago