2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஆணையாளர் நாயகத்துக்கு பிணை

Editorial   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 கனரக வாகனமொன்றின் சங்கிலி இலக்கத்தை (Chassis Number) மாற்றிப் பதிவு செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 நீதவான் எம்.எம்.ஐ. வாசல முன்னிலையில் இன்று (20) அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  சந்தேகநபரான ஆணையாளர் நாயகத்தை 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

  பிணையில் விடுவிக்கப்பட்ட அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

  இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .