2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஆப்கானிஸ்தானின் அதிர்வே கண்டியில் உணரப்பட்டது

Thipaan   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, மெததும்பர பகுதியில், சிறியதொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. திங்கட்கிழமை (29) இரவு 10.30க்கு 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே  இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பல்லேகல, ஹக்மான்ன மற்றும் மஹாகனதரவ பகுதிகளில் அமைந்துள்ள நிலநடுக்க கண்காணிப்பு நிலையங்களில், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இவை  தொடர்பான துல்லிய தகவல்களை, கண்காணிப்பு நிலையங்கள் ஆராய்ந்து வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ஹிந்துகுஷ் மலைப்பாங்கான பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்வின் பெறுபேறாகவே, மெததும்பரையில் பூமியதிர்வு உணரப்பட்டதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X