Janu / 2026 மே 13 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளின் எதிர்காலம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் குழு (UGC) வழங்கிய தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) பதில், பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர் ஒருவரின் சகோதரரால் கோரப்பட்ட இந்தத் தகவல்களில் வெளிவந்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
வேலைவாய்ப்பு இல்லை: “ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் போதுமான அளவில் இல்லாததால், புதிய பணியிடங்களை உருவாக்கத் தற்போது முடியாத நிலை உள்ளது” எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதை பல்கலைக்கழக மானியங்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
திட்டமிடல் இன்மை: “2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை வரை பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களையும், வெளியேறும் பட்டதாரிகளையும் கருத்தில் கொண்டு நீண்டகாலத் தேசியத் திட்டம் ஏதேனும் உள்ளதா?” என்ற கேள்விக்கு, பல்கலைக்கழக மானியங்கள் குழு நேரடியாக “இல்லை” எனப் பதிலளித்துள்ளது.
பயிற்சி குறித்த அறிவிப்பு: நியமனத் தாமதங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, 2026 ஆம் ஆண்டு முதல் பயிற்சிக் காலத்தை (Internship) வருடத்திற்கு இருமுறை (ஜனவரி 1 மற்றும் ஜூன் 1) ஆரம்பிக்கும் புதிய அட்டவணை அறிமுகப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிற்சியினை ஆரம்பிப்பதில் நிலவும் தாமதத்தைக் குறைப்பதே நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.
நீடிக்கும் நெருக்கடி: 2011 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிப் பட்டம் பெற்ற மருத்துவர்களுக்குக் கூட இதுவரை அரச நியமனம் வழங்கப்படவில்லை. இவ்வாறான சூழலில், மாணவர்களின் அடிப்படை உரிமையான பயிற்சிக் காலத்தை (Internship) வழங்குவதையே ஒரு சாதனையாகச் சுகாதார அமைச்சு வெளிக்காட்டுவதாகப் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேத பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு நெருக்கடி, அரசின் திட்டமிடல் பலவீனம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் பொறுப்பின்மை குறித்து தற்போது நாடு தழுவிய ரீதியில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
5 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago