Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 18 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் பல பிரிவுகளில் நேற்று (17) பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணிவரையான 8 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட 17 விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதுடன், 59 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேல்மாகாணத்தின் வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிநடத்தலின் கீழ் களனி, கம்பஹா, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளை மையப்படுத்தி, நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த 17 விடுதிகளிலிருந்தும் 8 முகாமையாளர்கள், 42 பெண்கள், 9 ஆண்கள் உள்ளடங்களாக 59 பேர் கைதுசெய்யப்பட்டு, நிட்டம்புவ, வேயாங்கொட, ஜா-எல, பியகம, நீர்கொழும்பு, வத்தளை, கம்பஹா, யக்கல ஆகிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19- 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் இன்று (18) கம்பஹா, நீர்கொழும்பு, மஹர, அத்தனகல்ல, வத்தளை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago