Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாளக்குழு உறுப்பினரான அமுனுகொட சஞ்சீவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், கையில் விலங்குடன் ஜா-எல தடுகம ஓயாவில் பாய்ந்து உயிரிழந்துள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த 31ஆம் திகதி கந்தானையில் வைத்து பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக சஞ்சீவ கைதுசெய்யப்பட்டிருந்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், ஏற்கனவே சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரெனவும், தெரிவித்தார்.
தடுகம ஓயாவில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ள அமுனுகொட சஞ்சீவ களனி குற்றவிசாரணைப் பிரிவினரால், நேற்று இரவு அநுராதபுரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு, பேலியகொட பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட போது, தனக்கு சிறுநீர் கழிக்க செல்ல வேண்டுமென பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளா்ர.
இதன்போது கையில் விலங்குடன் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உதவியுடன் சந்தேகநபர் செல்ல அனுமதிக்கப்பட்ட போது, குறித்த பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு சந்தேகநபர் ஆற்றில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததுடன், சந்தேகநபர் பொலிஸ் விசேட படையணியின் முன்னால் வீரரென்றும், இவர் கொலை, கொள்ளை பலவறறுடன் தொடர்புடையவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
38 minute ago
46 minute ago