2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆவா எனும் பெயரில் ‘கோட்டா குழு’

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் இராணுவ உயர்மட்ட அதிகாரி ஆகியோரின் தலைமையிலேயே, ஆவா குழு, வடக்கில் உருவாக்கப்பட்டது” என, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு, கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் தி​ணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை (02) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.   

அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில், “முன்னாள் பாதுகாப்புச் செயலாளரால், முன்னாள் இராணுவ உயரமட்ட அதிகாரியின் தலைமையில் யுத்தகாலத்தில் ஆவா குழு உருவாக்கப்பட்டது. அவர்களாலேயே ஆயுதங்கள், நிதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு, ஆவா குழு போஷிக்கப்பட்டது.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில், “ முன்னாள் பாதுகாப்புச் செயலாளரால், முன்னாள் இராணுவ உயர்மட்ட அதிகாரியின் தலைமையில் யுத்தகாலத்தில் ஆவா குழு உருவாக்கப்பட்டது. அவர்களாலேயே ஆயுதங்கள், நிதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு, ஆவா குழு போஷிக்கப்பட்டது.  

யுத்த காலத்தில், விடுதலைப் புலிகள் மீதும் ஆவா குழுவினர் தாக்குதல் நடத்தினார்கள். ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமை கொலை செய்தமை, உள்ளிட்ட விடயங்களிலும் அன்றைய ஆவா குழுவினர் தொடர்புபட்டிருந்தனர்.  

யுத்தகாலத்தில் பயங்கரவாதிகளை அழிக்க ஆவா குழு போன்ற கும்பல்களின் தேவை இருந்திருக்கலாம். ஆனால், இன்று அவ்வாறான ஆவா குழுவுக்கு எந்தவொரு தேவையும் இல்லை. வடக்கில் உள்ள பொலிஸார் மீது தாக்குதல் நடத்தவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை.  

அமைதியான சூழ்நிலையைச் சீர்குலைக்க, சில தரப்பினர், ஆவா குழுவினரை மீண்டும் தலைதூக்கச் செய்து, கொலை கொள்ளைகளில் ஈடுபட்டுகின்றனர்.

ஆவா குழுவில் உள்ளவர்களில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆவா குழுவை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டள்ளன” என்றார்.  

“இவ்வளவு நாட்களாக ஆவா குழுவை அழிக்க ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று, ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, ஆவா குழு இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்து விட்டு இப்போது திடீரென்று தலையெடுத்துள்ளது. அத​னை முற்றாக அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.  

இதேவேளை, “ஆவா குழுவினரை உருவாக்கியது கோட்டபாய என்றால், நடவடிக்கை எடுக்கலாம் தா​னே?” என்று ஊடகவியலாளர்கள் கேட்க, “ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் முன்​னெடுக்கப்பட்டுள்ளன” என்று மட்டும் கூறினார்.  

இதேவேளை, அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கோட்டாபய, தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புகளோடு, தன்னுடைய பணிகளை அமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .