2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இடமாறி இறங்கிய பராசூட்

George   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வு, கொழும்பு காலிமுகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு நடைபெற்றதுடன், பராசூட் வீரர்களின் சாகச நிகழ்வும் நெடைபெற்றது.

இதன்போது, சுமார் 10,000 அடி உயரத்திலிருந்தும் பராசூட் வீரர்கள் விமானத்திலிருந்து கீழே குதித்தனர். இவ்வாறு குதித்த வீரர்கள், சரியான இடத்தில் தரையிறங்கிய நிலையில், ஒரு வீரர் மாத்திரம்  இடமாறி இறங்கிவிட்டார்.

இறுதியாக தரையிறங்கிய வீரரே, கொழும்பு துறைமுகம் உள்ள பகுதியில் தரையிறங்கினார். அவரை மீட்க, படகுகளும் அம்பியூலன் வண்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X