2021 மே 06, வியாழக்கிழமை

இணைய போலிச் செய்திகளைத் தடுக்க சட்டத்தில் மாற்றம்?

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 17 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இணையத்தில் போலி பிரசாரம், போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக  சட்டத்தைத் திருத்த அரசாங்கம் தீர்மானித்தது.

இணையத்தில் போலி பிரசாரத்தைப் பரப்புபவர்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு குற்றவியல் தண்டனைக் கோவை திருத்தப்படவுள்ளது.

இத்திருத்தமானது, பொதுமக்கள் அமைச்சர் சரத் வீரசேகரவால் முன்மொழியப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்போதிருக்கும் சட்டமானது திருத்தப்படவுள்ளதாக, வீரசேகர, முல்லேரியாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .