Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 மே 10 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சனிக்கிழமை 5 மணி முதல் அமலுக்கு வந்ததாக அறிவித்திருக்கிறார் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி.
இன்று மாலை 3.35 மணிக்கு பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் இந்திய அதிகாரிகளுடன் பேசியதாகவும் கடல் வான் மற்றும் தரைவழி தாக்குதலை நிறுத்தக் கூறியதாகவும், இதை எடுத்து 5 மணி முதல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் பாக்., இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக இந்திய எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென அறிவித்தார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பேசிய நிலையில் இரு நாடுகளும் உடனடியான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தார்.
மேலும் பாகிஸ்தான் துணை பிரதமரும் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக உறுதி செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியா தரப்பில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் மத்திய வெளியுறத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
8 hours ago
10 May 2025