2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல்

Freelancer   / 2025 மே 11 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர் நிறுத்தம் செய்து கொள்வதாக அறிவித்த பின்னர் அதையும் மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் நேற்று இரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியுள்ளது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், இரவு 11 மணிக்கு செய்தியாளர்களுடன் பேசிய இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்தால் முழுவீச்சில் தக்க பதிலடி கொடுக்க இராணுவத்துக்கு அறிவுறுத்தல்களை அரசு வழங்கியிருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  

இத்தகைய அத்துமீறல் தாக்குதல் நடவடிக்கைகளைக் களைய பாகிஸ்தான் தீவிரத் தன்மையுடனும் முழு பொறுப்புடனும் செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்துகிறது.

இந்திய இராணுவத்தினர் இந்தச் சூழலில் மிகுந்த உன்னிப்புடன் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில், எல்லை தாண்டிய அத்துமீறல்கள் தொடர்ந்தால் முழுவீச்சில் எதிர்வினையாற்ற இராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராணுவம் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X