Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 11 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய மத்திய வங்கியால், இலங்கை மத்திய வங்கிக்கு, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு, இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுக்குள், வெளிநாட்டுக் கையிருப்புகளை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில், இலங்கை மத்திய வங்கியால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்திய மத்திய வங்கியால், இந்தப் பணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இத்தொகைக்கு மேலதிகமாக, மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கு, இந்திய மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெறும் இந்த நிதி ஒத்துழைப்பானது, இலங்கை தொடர்பான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கக் காரணமாக அமையுமென்றும் இதனூடாக, போதுமானளவு வெளிநாட்டுக் கையிருப்புகளைக் கொண்டுநடத்த முடியுமெனவும், இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
இந்திய மத்திய வங்கியிடமிருந்து கிடைக்கும் இந்த நிதியானது, “பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பின் பரிமாற்ற வசதி” என்பதன் கீழ், இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில், மொத்த வெளிநாட்டுக் கையிருப்புகளின் தொகை, 6.94 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago