Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 18 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் சிறுத்தைகள் இருக்கின்றன. ஆனால் சீட்டா என்ற அழைக்கப்படுகின்ற சிறுத்தைப் புலிகள் இனம் இல்லை.
இந்தியாவில் இருந்த கடைசி சிறுத்தைப் புலி, 1948-ல் சத்தீஷ்காரின் கோரிய பூங்காவில் இறந்து விட்டது.இதையடுத்து இந்தியா சிறுத்தைப்புலிகள் இல்லாத நாடாக 1952-ல் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையை முடிவுக்கு கொண்டு வரவும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன சிறுத்தைப்புலி இனத்துக்கு புத்துயிரூட்ட வும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைப்புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 5 பெண், 3 ஆண் என 8 சிறுத்தைப்புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடு ஆனது.
இதன்படி கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தை புலிகளும் நேற்று குணோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. இந்த பூங்காவில் சிறுத்தை புலிகள் வேட்டையாடவும் நடமாடவும் போதுமான இடவசதி உள்ளதா? என சந்தேகங்கள் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், குணோ தேசிய பூங்காவில் 20 முதல் 25 சிறுத்தை புலிகள் வசிக்கவும் வேட்டையாடவும் போதுமான இடவசதி இருப்பதாக தெரிவித்துள்ளனர். வனவிலங்குகள் பாதுகாப்பாகவும் வன உயிரினங்களின் புத்துயிருக்கும் மத்திய பிரதேசம் மிகச்சிறந்த இடம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago