Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும், பிரதமர் மோடியுடன் பேச ஆவலாக உள்ளேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், ட்ரம்புடன் பேச நானும் ஆவலாக உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
“இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தடைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. வரும் வாரங்களில் என்னுடைய சிறந்த நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலாக இருக்கிறேன். இரண்டு சிறந்த நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என கூறிஉள்ளார்.
ட்ரம்பின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள், அத்துடன் இயற்கையான கூட்டாளியும் கூட. இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை, இருதரப்பு கூட்டாண்மையின் எல்லையற்ற வாய்ப்புகளை திறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க எங்கள் அதிகாரிகள் குழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நானும் ஜனாதிபதி ட்ரம்புடன் பேச ஆவலுடன் இருக்கிறேன். இரு நாட்டு மக்களுக்கும் நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .