R.Maheshwary / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைகளுக்கான தேர்தல் காலந்தாழ்த்தப்பட்டு வருவதால், எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, எனினும் நாட்டில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இரண்டு வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்து, நாட்டில் எவரும் போராட்டங்களை மேற்கொள்ளவில்லை என்றும் கூறிய அவர், மாகாணப் பாடசாலைகள் அல்லது மாகாண வைத்தியசாலைகளில், இதனால் எந்தவிதமானப் பாதிப்புகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் இதனாலேயே அண்மையில் வடக்கு மாகாணத்துக்குச் சென்று அங்குள்ள அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அவர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.
சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் நாடாக இலங்கையை ஏனைய நாடுகள் உதாரணமாகக் கொள்வதாகவும் இவ்வாறு பாரிய கடன்களைப் பெற்றுக்கொள்ளும் அரசாங்கம், நாட்டில் செய்ததென்ன என நாட்டு மக்கள் கேள்வி எழுப்ப வேண்டுமெனவும் தெரிவித்தார்.
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago