2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

Editorial   / 2023 மே 23 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2023-24 கல்வியாண்டில்  பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரையான பல்வேறு பிரிவுகளிலும் கற்க விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கீழ்வரும் கற்கைநெறிகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது;

ஆயுர்வேதம்

பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரை

யுனானி

பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரை

ஹோமியோபதி

பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு

சித்த

பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு

யோகா

B.Sc /BA (யோகா சாஸ்த்ர)/ PhD

2.       ஆயுள்வேதம், யுனானி, சித்த மருத்துவம்  மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பினை தொடர விரும்பும் விண்ணப்பதாரிகள் க.பொ.த உயர் தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில் சித்திபெற்றிருக்கவேண்டியது அவசியமாகும். அதேவேளை யோகாவில் B.Sc மற்றும் B.A (யோக சாஸ்த்ர)   ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் க.பொ.த உயர் தரத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

3. அத்துடன் ஆயுர்வேதம், சித்த, யுனானி மற்றும் ஹோமியோபதி துறைகளில் பட்டப்பின்படிப்பினை தொடர விரும்புவோர் இந்திய மருத்துவ மத்திய பேரவையினால் அங்கீகரிக்கப்படுகின்ற பட்டப்படிப்பினை பூர்த்திசெய்திருக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் ஆயுர்வேத, யுனானி மற்றும் யோகா ஆகியவற்றில் PhD கற்கைநெறியினைத் தொடர விரும்புவோர் குறித்த துறைகளில் இந்திய மருத்துவ மத்திய பேரவையினால் அங்கீகரிக்கப்படுகின்ற இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

4.       இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுடன், இதற்காக தங்குமிட கொடுப்பனவு மற்றும் வருடாந்த உதவித்தொகை ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

5.       இதற்கான விண்ணப்பங்களை ICCR A2A தளம் ஊடாக http://www.a2ascholarships.iccr.gov.in  2023 மே 31ற்கு முன்னதாக பதிவேற்றம் செய்யவும். இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்த்தின் கல்விப் பிரிவினை 0112421605, 0112422788, 0112422789 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் அத்துடன் http://edu.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் தொடர்பு கொள்ளலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .