Nirosh / 2021 மார்ச் 13 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.றொசேரியன் லெம்பேட்)
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும இடையில் இன்று (13) விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பல்வேறுபட்ட அபிவிருத்தி விடையங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், முக்கியமாக தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதென்றார்.
ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவை வெகுவிரைவில் இடம்பெறும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்தாகவும் அவர் கூறினார்.
குறித்த சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்திருந்ததாகவும், இந்தியாவை எமது மக்கள் கூடுதலாக பாதுகாப்பின் நிமித்தம் நேசிக்கின்ற ஒரு நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
37 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
9 hours ago