2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் மொரகொட சந்திப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 23 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நிலை தொடர்பான விரிவான மதிப்பாய்வை மையப்படுத்தியதாக இந்த சந்திப்பு நேற்று (22) இடம்பெற்றதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எதிர்கால ஒத்துழைப்புக்கான விடயங்கள் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுகா கதுருகமுவ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X