Editorial / 2026 மார்ச் 13 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை பொலிஸார் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்கிடையில், காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக பதிவுகளையும் ஜாய் கிரிசில்டா வெளியிட்டிருந்தார்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்குத் தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதற்கிடையில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான் தந்தை என டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்க தயார் என சென்னை ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு தெரிவித்திருந்தது.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிரான வழக்கு விசாரணையில் சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்தது. மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக வழக்கறிஞர் ஆணையர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதள பக்கத்தில் தன் மகன் புகைப்படங்களை முதன் முதலாக வெளியிட்டுள்ளார். அதற்கான கேப்ஷனில், ‘மாதம்பட்டி ராகா ரங்கராஜ்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. நெட்டிசன்கள் பலரும், இருவர் பிரச்சனையில் குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தாதீர் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
57 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago