Freelancer / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக,இம்மாதம் 14 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று நண்பகல் 12.11 அளவில் ஹத்திகுச்சி, கலங்குட்டிய, ஹல்மில்லேவ, இபலோகம, பலுகஸ்வெவ, ஹபரணை ஆகிய பகுதிகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. (a)
46 minute ago
51 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
3 hours ago
5 hours ago