J.A. George / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்று(18) முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் 20 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது.
சபாநாயகர் மஹந்த யாப்பா அபேவர்தனவுக்கும் நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை நிராகரித்துள்ளனர்.
இதேவேளை, இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனை தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனை தெரிவித்திருந்தார்.
அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வரை தான் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளப்போவதில்லை என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
25 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
2 hours ago