2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இன்று முதல் கடும் நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவட்டங்களுக்கு இடையில் அனுமதியின் பயணிக்கும் நபர்களுக்கு எதிரான இன்று (10) முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறான நபர்கள் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .