Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜூலை 11 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க) பொதுக்குழுக்கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் நடந்துவரும் அந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதுவரை ஓ.பி.எஸ். வகித்துவந்த பொருளாளர் பொறுப்புக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் காலையில் கைப்பற்றிய சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைக்கின்றனர். அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கே பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .