2025 மே 21, புதன்கிழமை

’இமாம், அல்விஸ், பட்டலந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கவும்’

Freelancer   / 2025 மார்ச் 09 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த   ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  இமாம் மற்றும் அல்விஸ்  அறிக்கைகளையும்   பட்டலந்த  சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம்  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க  வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான தயாசிறி ஜயசேகர  கோரிக்கை விடுத்தார்.  

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

 உள்ளூராட்சிமன்றத்  தேர்தலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள  25 சதவீத பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டை   பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும்  வழங்க வேண்டும். இதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். 

  நாட்டில் மொத்த ஊழியப்படையில் 66.6 சதவீதம் ஆண்களின் பங்களிப்பும், 31.3  சதவீதம் பெண்களின் பங்களிப்பும் காணப்படுகிறது. இன்றும் பெரும்பாலான பெண்கள் இல்லத்தரசிகளாக வாழும் நிலைமை காணப்படுகிறது.   பெண்களின் முன்னேற்றத்துக்கு அமைய இந்நிலைமை   மாற்றம் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .