Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
லஹிரு பொத்முல்ல
'நாட்டையும் மக்களையும் பாதிக்கும் இரகசியங்கள் குறித்து அறிந்துக்கொள்வதற்கான பரிசுத்தமான உரிமை மக்களுக்கு உண்டு' என்று ஊழலுக்கு எதிரான குரலின் ஒருங்கிணைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான வசந்த சமரசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இணைந்த எதிரணியினர் புதியதொரு கட்சியை உருவாக்குவார்களாயின், இணைந்த எதிரணியில் உள்ள சில அரசியல்வாதிகள் குறித்தான இரகசியத்தை வெளியிடுவேன் என்று ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்டிருந்தமையை குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டமை, கொலை, மோசடி, ஊழல் தொடர்பிலான தகவல்களை நிறுத்திவைப்பது மிகவும் பாரதூரமான விடயமாகும். இது, ஜனாதிபதி தேர்தலின் போது தங்களது உரிமைகளை வெளிப்படுத்திய 6.2 மில்லியன் வாக்காளர்களுக்கு எதிரான செயற்பாடாகும். இரகசியங்களை மறைப்பதற்காக மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் இலாபத்துக்காக இவ்வாறு நடந்தார். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்தவின் கால்தடத்தை தொடர்வதற்கு எம்மால் அனுமதி வழங்க முடியாது' என்று எழுதப்பட்டுள்ளது.
'பொதுக்களின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை, குடும்ப ஆட்சி போன்றவற்றை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டே, இவைக்கெதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர்.
கடந்த ஆட்சிக்காலத்தின் போது ஊழல், மோசடிகளில் ஈடுபட்டிருந்த அரசியல் வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து மக்கள் ஏற்கெனவே மனத்திருப்தி இல்லாம் இருக்கின்றனர். உங்கள் கருத்துக்களின் உறுதியின் மூலமே, மக்களது உரிமைகளை நீங்கள் பாதுகாக்கின்றீர்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும். இதனால், இரகசியங்கள் என்று கூறியவற்றை வெளியிடுமாறு கோருகின்றோம்' என்று அந்தக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
20 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
3 hours ago